“22 முட்டாள்கள் விளையாடுவதை 22,000 முட்டாள்கள் பார்க்கிறார்கள் ”

எதன் அடிப்படையில் “பெர்னாட் ஷா” இதை கூறினார் என்று தெரியவில்லை. கால் பந்திலும்,ஹாக்கியிலும் சேம் சைடு கோல் போடும் அறிவாளிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

மேலும் இதை சோம்பேறிகளின் விளையாட்டு என்பதையும் ஏற்க முடியாது.கால்பந்து , டென்னிஸ் , பேஸ் பால் போன்றவைகளும் கையில் பாப்கார்னுடனோ அல்லது பீருடனோதான் பார்க்கப்படுகிறது.எந்த விளையாட்டு ரசிகனும் வீரர்களின் பின்னாலேயே ஓடி போட்டிகளை பார்ப்பதில்லை.வசதியாக அமர்ந்து கொண்டோ அல்லது நின்றுகொண்டோதான் போட்டிகளை பார்க்கிறான்..பின் எங்கிருந்து வந்தது “கிரிக்கெட் - சோம்பேறிகளின் விளையாட்டு”?.

எனகென்னவோ கில்கிறிஸ்ட், யுவராஜின் reflex கள் ஒரு திறமையான கோல் கீப்பரின் reflex ஐ சமன் செய்யும் என்றே படுகிறது.மற்ற விளையாட்டுகளை போன்றே இதிலும் அணியை நிர்வகிக்கும் திறமையும் , சமயோகித அறிவும்,உடல் வலிமையும் தேவைபடுகிறது.தொடர்ந்து ஒரு பத்து ஓவர்கள் போட்டு பார்த்தாலோ அல்லது 90 ஓவர்கள் வெயிலில் நின்றாலோ தான் தெரியும் எங்கெல்லாம் வலிக்கும் என்று.கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்று எப்பொழுது முத்திரை குத்தப்பட்டது என்று தெரியவில்லை.(ஒருவேளை பேண்டும் , சட்டையும் போட்டு ஆடுவதலோ :) ) . விளையாட்டில் Sportmanship இருக்கலாம்.Gentlemanship ?.

உலகின் பிரபலமான விளையாட்டுகள் இன்று பொழுதுபோக்காகவே பார்க்கப்படுகின்றன. திறமை,நாட்டுப்பற்று எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.இதில் இந்த விளையாட்டு தான் உயர்ந்தது என்றும் இந்த விளையாட்டு தாழ்ந்தது என்றும் ஒதுக்கிவிட முடியாது.