கரண் ஜோகர் ரேஸ்(Race) படத்தை எடுத்திருந்தால் , கபி குஷி (கபி!!) twist என்று ஏதாவது ஒரு நீளமான பெயரை வைத்திருப்பார்.படம் முழுக்க அதிரடி திருப்பங்கள்.நானும் என் கற்பனை குதிரையை மிக வேகமாக ஓட்டி நானும் சில திருப்பங்களை அனுமானித்தேன்.(கதையையும் , வசனகளையும் முன்கூட்டியே கணிப்பதில் என் நண்பன் நரேஷ் வல்லவன் .நாங்கள் இருவரும் om Santhi Om பார்த்த போது கதை இப்படிதான் இருக்குமென முன்கூட்டியே சொன்னான்.)..ok…ok..back to review (ஓ இத நீ review னு வேற சொல்றயா ?).கட்ரினாகைப் இன் secretary வேடம் அவருக்கு பொருந்தவே இல்லை.தென் ஆப்ரிக்கா அழகாக படமாக்க பட்டிருக்கிறது.

பாடல்களுக்கும் திரைகதைக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் பாடல்களின் வரிகளில் அர்த்தம் செரிந்திருந்தது :)))..கடைசிவரை படத்தில் நல்லவர்கள் யார்,கெட்டவர்கள் யார் என்று தெரியாததும் ஒரு புதுமை.படத்தில் உள்ள கதாபத்திரங்கள் அனைத்துமே பணத்தாசை பிடித்தவர்களாகவே காட்டப்படுகின்றனர்.படத்தின் சில இடங்கள் பழைய ஜெய்சங்கரின் படங்களை ஞாபகபடுத்தின.அனில் கபூர் பல ஜோக்குகள் அடித்தாலும் திரைஅரங்கில் நான் உட்பட எவருமே சிரிக்கவில்லை.மொத்தத்தில் பாக்ஸ்-ஆபிஸில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் இப்படத்தை யாராவது இலவசமாக கூட்டிசென்றால் பார்க்கலாம்.
டிஸ்கி : பிபாசா பாசுவிற்காக நான் படத்திற்கு செல்லவில்லை :)